58. அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் கோயில்
இறைவன் ஆம்ரவனேஸ்வரர்
இறைவி அழகாலுயர்ந்த நாயகி
தீர்த்தம் காயத்திரி தீர்த்தம்
தல விருட்சம் மாமரம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருமாந்துறை, தமிழ்நாடு
வழிகாட்டி திருச்சியிலிருந்து லால்குடி சென்று அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி இரயில் நிலையத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Thirumanthurai Gopuramமாமரங்கள் நிறைந்த தலமாக இருந்ததால் 'மாந்துறை' என்று அழைக்கப்படுகிறது. அதனால் இத்தலத்து மூலவர் 'ஆம்ரவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். ஆம்ரம் - மாமரம்.

மூலவர் 'ஆம்ரவனேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'அழகாலுயர்ந்த நாயகி' அல்லது 'அழகம்மை' என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

பங்குனி மாதத்தின் முதல் மூன்று நாட்கள் மூலவர் மீது சூரியனின் கதிர்கள் விழுகின்றன.

Thirumanthurai Amman Thirumanthurai Moolavarஇத்தலத்து இறைவனை மான் ஒன்று வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. தாயை இழந்து தவித்த மான் குட்டிக்கு இறைவன் தாயாக வந்து உதவிய தலம்.

பிரம்மா, சூரியன், சந்திரன், கண்ணுவ முனிவர், மிருகண்ட முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழால் போற்றிப் வணங்கியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com